அமெரிக்காவிலிருந்து திடீரென நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்
19 Sep,2020
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் விசா காலம் முடிவடைந்த நிலையிலும் அமெரிக்காவில் தங்கியிருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த குழு அமெரிக்கா - வாஷிங்டனில் இருந்து கென்யாவின் நைரோபிக்கு சென்று, அங்கிருந்து கென்ய விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பிறகு புலனாய்வு அதிகாரிகள் இவர்களிடம் தகவல்களைப் பெற உள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.