இலங்கை தமிழ் மாணவன் அவுஸ்ரேலியாவில் ஆற்றில் மூழ்கி மரணம்!
13 Sep,2020
அவுஸ்ரேலியாவில், விக்டோரியாவை அண்மித்த பகுதியில் ஆற்றில் மூழ்கி இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில், விக்டோரியாவை அண்மித்த பகுதியில் ஆற்றில் மூழ்கி இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் ஆற்றுக்குச் சென்ற இளைஞன் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல் போயுள்ளார். இவரைத் தேடும்பணி வெள்ளி முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரது சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.மெல்பேர்னில் கல்வி கற்று வரும் இலங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய தமிழ் இளைஞனே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்