தொடர் குண்டுச்சத்தங்களால் அதிர்ந்த யாழ்ப்பாணம்: காரணம் இதுதான்!
11 Sep,2020
யாழ்ப்பாண நகரத்தை அண்டிய பகுதிகளில் இன்று திடீரென கேட்ட தொடர் குண்டுவெடிப்பு சத்தங்களால் மக்கள் மத்தியில் இலேசான பதற்றம் தென்பட்டது.
நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாண நகரம், வலிகாமம் தென்மேற்கு, தீவக பகுதிகளில் இந்த தொடர் குண்டு சத்தங்களை கேட்க முடிந்தது. பெரும் சத்தத்தில் குண்டுகள் – குறிப்பிட்ட நேரத்திற்கு வெடித்தது.
இதனால் சில பகுதிகளில் வீடுகளில் அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்
இது தொடர்பில் தமிழ்பக்கம் பாதுகாப்பு தரப்பினிடம் வினவியபோது, இராணுவத்தினரால் பழைய குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அராலித்துறைக்கு அண்மையான குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பகுதிகளில் அவ்வப்போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இராணுவத்தின் களஞ்சியசாலைகளில் இருந்த அகற்றப்பட வேண்டிய வெடிபொருட்களே வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.