பௌத்த பிக்கு உட்பட மூவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது
11 Sep,2020
குருணாகல் – வாரியபொல பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபரிடம் இருந்து 530 மில்லி கிராம் ஹெரோயினும், மற்றைய நபரிடம் இருந்து 4 ஆயிரத்து 150 மில்லி கிராம் ஹெரோயினும், பௌத்த பிக்குவிடம் இருந்து 4 ஆயிரத்து 950 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பௌத்த பிக்கு கைது செய்யப்படும் போது சாதாரண உடையில் இருந்துள்ளதுடன், அவரது பையில் காவி உடை உட்பட பௌத்த சமய அடையாள பொருட்கள் இருந்துள்ளதாக தெரியவருகிறது.
சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் உடைகளை மாற்றிக்கொண்டு இந்த நபர் செயற்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.