திலீபனின் நினைவு தினம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேரணிக்கு தடை
10 Sep,2020
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரை பேரணியொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்டவேளை, அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார்.