! ஓடும் வாகனத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது!
09 Sep,2020
திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலம்போட்டாறு பிரதேசத்தில் வேன் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களை சீனன் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சீனன் குடா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வேன்னை சோதனை செய்தபோது சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களும் கைது செய்ப்பட்டதாக சீனன் குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாள் ஒன்றுக்கு 10000 ரூபாய் வாடகை வேன் ஒன்றில் 25 வயது முதல் 50 வயதுடைய எட்டு பெண்கள் சூதாடிய நிலையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 79650 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூதூர், தக்வா நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரு பெண்களும், சங்கமம் பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும்,சிங்கபுர இரண்டாவது ஒழங்கையைச்சேர்ந்த ஒருவரும், ஆண்டாங்குளத்தைச்சேர்ந்த ஒருவரும், மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும், கொட்பே பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும், ஜந்தாம் கட்டை பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும்,ரேவதி கிராமத்தைச்சேர்ந்த ஒருவரும் அடங்குவதுடன் அதில் ஒரு தாய் தனது எட்டு வயது மகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள சீனன் குடா பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.