இணையதளம் மூலம் பண மோசடி : பெண் உட்பட இருவர் கைது!
09 Sep,2020
நவீன வகை கைத்தொலைபேசிகளை குறைந்த விலைக்குப் பெற்று தருவதாகக் கூறி இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறைந்த விலைக்கு நவீன தொலைபேசிகளைப் பெற்றுதருவதாகக் கூறி பண மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த 6 ஆம் திகதி மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய தென் மாகாண குற்ற விசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பெண்னொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேகநபர்கள் கடந்த 7 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.