இராணுவ அதிகாரியை வடக்கின் ஆளுநராக நியமிக்குமாறு கோரினேன்! - டக்ளஸ் ஒப்புதல்
25 Aug,2020
முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சந்திரசிறியை வடக்கின் ஆளுனராக நியமிக்குமாறு இந்த அரசாங்கம் வந்தவுடன் தான் கோரியிருந்ததாக, கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சந்திரசிறியை வடக்கின் ஆளுனராக நியமிக்குமாறு இந்த அரசாங்கம் வந்தவுடன் தான் கோரியிருந்ததாக, கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ வடக்கில் இராணுவ அதிகாரியை ஆளுனராக நியமிக்கும் நிலைப்பாடு இதுவரை அரசிடம் இல்லை. எனினும் முன்னாள் ஜெனரல் சந்திரசிறியை ஆளுனராக நியமிக்குமாறு இந்த அரசாங்கம் வந்தவுடன் நான் கோரியிருந்தேன்.
ஏனெனில் அவருக்கு பின்னர் ஆளுனராக வருகைதந்த எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை. எனவே சந்திரசிறியை நியமிக்க கோரினேன். எனினும் ராணுவ அதிகாரியை நியமிக்காமல் சிவில் அதிகாரியையே நியமிக்கவேண்டும் என்று ஐனாதிபதியும் பிரதமரும் அன்று கூறினார்கள் என தெரிவித்தார்