மீண்டும் களமிறங்கியுள்ளார் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
24 Aug,2020
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி ஒன்றை தனியாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தியில் இருக்கும் கட்சியினரை அவர், இவ்வாறு ஒருங்கிணைத்து வருகிறார்.
இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின்வரிசை அரசியல்வாதிகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதுடன் எதிர்காலத்தில் தெரிவாகும் புதிய தலைவரின் கீழ் இவர்களை இணைக்க சந்திரிக்கா திட்டமிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே முன்னாள் ஜனாதிபதி அண்மையில் இணையத்தளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.