மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்
23 Aug,2020
பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் இன்றையதினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.
ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்புவாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன்,பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்குமானு அனுமதியை வழங்கினார்.
இந்நிலையில்,பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீண்டும் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.