கொலை செய்த கொலையாளி பாராளுமன்றம் செல்கிறார்!
22 Aug,2020
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளில் பிரேமலால் ஜயசேகர கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார கூட்டமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரை கொலை செய்ததுடன் மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.