நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
22 Aug,2020
நாட்டில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இரண்டாயிரத்து 927ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஆறு பேர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாட்டுக்குத் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருவர் சென்னையில் இருந்தும் மற்றையவர் துருக்கியில் இருந்தும் தாயகம் திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இன்று 24பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இதுவரை இரண்டாயிரத்து 789பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்னும் 127பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதுடன் இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது