பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி! - கண்டிக்கு வருமாறு அழைப்பு
11 Aug,2020
.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் அவரை பங்கேற்கு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவர் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்ப்பது குறித்து அரசாங்கம் நேற்று ஆலோசனைகளை நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன