இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
10 Aug,2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிர்தது 844 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில், 2 ஆயிரத்து 579 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது
அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 254 பேர் தொடர்ந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 58 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.