கொரோனா வைரஸ் – இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 665 பேர் பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
15 Jul,2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2665 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் புதிதாக 19 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானவர்களில் மூன்றுபேர் ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 02 பேர் இராஜாங்கனை, லங்காபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்த இருவருக்கும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த மேலும் 1 நபருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு சேனபுர மறுவாழ்வு நிலையத்தில் உள்ள நான்கு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 666 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த தொற்று சந்தேகத்தில் 120 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது