தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் தமிழர் கைது
13 Jul,2020
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த தமிழர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் சி.ஐ.டியினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்தார் என்று கூறப்படும் மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தை சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் புலஸ்தினியின் சிறிய தந்தையரான செல்வராசா தேவகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.