இலங்கையில் மீண்டும் பாரிய அளவு அதிகரித்த கொரோனா நோயாளிகளின்
13 Jul,2020
இலங்கையில் மேலும் புதிய 90 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 90 புதிய கொரோனா தொற்றாளர்களில் 76 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களாகும்.
மிகுதி 14 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களென அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை 2,612 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.