கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்
01 Jul,2020
இலங்கையில் உள்ள திரையரங்குகளை திறக்கவும் நாடகங்களை நடத்தவும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீளவும் திறக்கப்படவுள்ளன.
கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் சினிமா திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் திரையரங்குகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனாவின் வீரியம் இலங்கையில் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், பல துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து கடந்த 27ஆம் திகதி திரையரங்குகள் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் திரயரங்குகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.