கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதியில் மாற்றம்!
29 Jun,2020
முன்னர் திட்டமிட்டபடி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வழமையான விமான சேவைகளுக்கு திறந்து விடப்பட்டமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் என துறைசார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலயத்தை முழுமையாக திறக்கும் நடவடிக்கை தாமதமடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இலங்கைக்கு வருகை தர விரும்பும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் விடயத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ . சந்திரஸ்ரீ தெரிவித்தார்