வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரத் தடை! உடனடியாக தடையுத்தரவை பிறப்பித்த கோட்டாபய
25 Jun,2020
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கே அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும் செயற்பாட்டினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நாட்களாக அவ்வாறு வந்தவர்கள் பலரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.