இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு
24 Jun,2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1991 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
குறித்த 11 பேரும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1980 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக இலங்கையில் ஒரே ஒரு கொரோனா நோயாளர் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த 29 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, தற்போது 421 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1548 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 22 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இலங்கையில் இது வரையில் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.