உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே இலங்கையை எச்சரித்ததாக கூறுகிறார் பாகிஸ்தான் தூதுவர்!
22 Jun,2020
இஸ்லாமிய தீவிரவாதிகளின் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருந்தது என பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முகமட் சாட் ஹட்டாக் தெரிவித்துள்ளார்
ஐஎஸ் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகளை அவதானித்த பின்னர் இலங்கை அதிகாரிகளிற்கு அது குறித்து உரிய நேரத்தில் தெரிவித்திருந்தனர்.
எனினும் இலங்கை தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த தகவலையும் பயனற்றது என கருதமுடியாது என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் முகமட் சாட் ஹட்டாக் அவ்வாறான தகவல்களை அலட்சியம் செய்வதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்றவை இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.