அவுஸ்ரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
19 Jun,2020
அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் ஊடாக மெல்பர்ன் நகரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களுள் அதிகமானவர்கள் அவுஸ்ரேலியாவில் உயர் கல்விக்காக சென்றவர்கள் ஆவர்.
இதேவேளை இந்திய கடற்படை வீரர்கள் 58 பேர், சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தற்காலிக விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுதகின்றது.