விமான நிலையத்தில் வெளியேறும் பகுதி மீளத் திறப்பு
16 Jun,2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் பகுதி நேற்று (15) நண்பகல் 12.00 மணி முதல் விமானப் பயணிகளுடன் வருகை தருபவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக புறப்படுவதற்காக, விமான பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்ட விமானப் பயணி ஒருவர், 03 விருந்தினர்களுடன் வெளியேறும் பகுதிக்குள் நுழைய முடியும்.
இவ்வாறு வருகை தரும் சகல விருந்தினர்களும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புறப்படும் பகுதிக்குள் அவர்கள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வெளிப்புற பார்வையாளர்கள், விமான நிலைய வெளியேறும் பகுதிக்குள் நுழைவதற்காக பற்றுச்சீட்டு கொள்வனவு செய்ய வேண்டும் என்பதோடு, பற்றுச்சீட்டு ஒன்றின் விலை 300 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது