நாடாளுமன்ற அரசியலை துறந்தார் மங்கள சமரவீர!
10 Jun,2020
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இன்று முதல் தனது நாடாளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளதாக அவர் இன்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அத்துடன் தனக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அரசியலிலிருந்து விலகிய போதிலும், அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும், மங்கள சமரவீரவுக்கு விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.