இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது
06 Jun,2020
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.