மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது.
29 May,2020
இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இன்று ஒரே நாளில் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது
இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1486 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 731 பேர் தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1471 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 716 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா நோயாளர்களாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.31
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) மாலை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,503 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்சமயம் 748 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதுடன், 745 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
68 பேர் தொடர்ந்தும் நோய்த்தொற்றுச் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.