கட்டாரில் 1051 இலங்கையருக்கு கொரோனா!
24 May,2020
கட்டாரில் 1051 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நோய்த் தொற்று பரவுகை காரணமாக கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான விண்ணப்பம் செய்துள்ளனர்.
கட்டாரில் இதுவரையில் மொத்தமாக 42,213 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 8513 பேர் குணமடைந்துள்ளனர்.
2018ம் ஆண்டில், கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 140,000 இலங்கையர்கள் கட்டாரில் பணியாற்றி வருகின்றனரனர் என்பது குறிப்பிடத்தக்கது.