சீசெல்ஸ் பிரஜைகளுக்கு இலங்கையில் சிகிச்சை - விசேட விமானத்தில் வந்தனர்!
24 May,2020
சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 பேர்,நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சீசெல்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய, இவர்களுக்கு இலங்கையில் வைத்திய பரிசோதனையை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.