ஊரடங்கு தளர்த்தப்படும் நேரம்,போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு .17 பேருக்கு கொரோனா
24 May,2020
எதிர்வரும் மே மாதம் 26 செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கப்படும்.
நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று (23) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,085 ஆக உயர்ந்துள்ளது.
கண்டறியப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 416 ஆக காணப்படுகிறது.
இதேவேளை இதுவரை 660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.