குரங்குக் கடிக்குள்ளான சிறுவன் படுகாயம்
22 May,2020
திருகோணமலை – மட்கோ பிரதேசத்தில் குரங்கு கடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் இன்று (22.05.2020) காலை 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன் 10 வயது மதிக்கத்தக்க திருகோணமலை-மட்கோ, முகம்மதிய்யா நகர் பகுதியை சேர்ந்தவரெனனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு காலை சாப்பாட்டை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் பின்னால் சென்ற குரங்கு காலை பிடித்த போது சிறுவன் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவனை குரங்கு கடித்து காயப்படுத்தியதுடன் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய கால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
திருகோணமலை நகர்ப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.