எதிரணி அரசியல்வாதிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது : ஐக்கிய
16 May,2020
அரசாங்கம் எதிரணி அரசியல்வாதிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என ஐக்கியமக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான முன்னாள் அமைச்சர் ரஞ்சித்மத்துபண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாங்கள் தோல்வியை சந்திக்கும்நிலை காணப்படுவதால் அரசாங்கம் எதிரணி அரசியல்வாதிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளமை இதனை புலப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் செய்தியாளர் மாநாட்டில் இடம்பெற்றவைகளை அடிப்படையாக வைத்து முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பல கரிசனைகள் காணப்படுவதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.இந்த கைதின்போது முன்னாள் அமைச்சரின் பல அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு எதிராக ஜனநாயக சக்திகளை அணிதிரளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.