பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் இம்மாத இறுதிவரை நீடிப்பு
13 May,2020
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 30 ஆம் திகதிவரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள், தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால், இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தமானது இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.