விடுதலைப் புலிகளின் தியாகங்களை வைத்து நான் ஒருபோதும் வாக்குக் கேட்பவனல்ல
12 May,2020
விடுதலை புலிகளின் தியாகங்களை வைத்து தான் ஒருபோதும் வாக்குகேட்பதில்லை என பல தடவைகள் கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி தொடர்பாக கூட்டமைப்பிற்குள் உள்ளவர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்ற நிலையில் இது குறித்து சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தேர்தல் காலங்களில் அவசர அவசரமாக சிலரது வாய்களில் இருந்து இவ்வாறான கூற்றுக்கள் வருவது சகஜம் என தெரிவித்த அவர் வாக்குகள் இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு விடுதலை புலிகளையோ அவர்களது ஆயுரதப்போராட்டத்தையோ ஒருபோதும் இகழவில்லை என குறிப்பிட்ட சுமந்திரன் தான் ஒரு அகிம்சைவாதி என்றும், இவ்வாறு விமர்சிப்பவர்கள், தன்னை ஆயுத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும் வன்முறையில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற கருத்தை திணிக்க முயலக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் விடுதலை புலிகள் அந்த காலகட்டத்தில் அரச பயங்கரவாததிற்கு எதிராக எடுத்த முடிவை இன்று எம்மால் விமர்சிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.