பள்ளிவாசலுக்கு சொந்தமான இறைச்சிக்கடை பிக்குவினால் முற்றுகை
08 May,2020
கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த பௌத்த பிக்கு ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கண்டி பொலிஸாக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றையடுத்து நாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதோடு, பௌத்தர்களின் முக்கிய தினமாக கருதப்படும் வெசாக் போயா தினம் நேற்றாகும்.
ஸ்ரீலங்காவில் பொதுவாக போயா தினங்களில் இறைச்சிக் கடைகளை திறப்பது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடைகளை மீறி குறித்த பள்ளவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடை திறக்கப்பட்டிருந்ததோடு, இறைச்சி விற்பனையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு வருகைத்தந்த பௌத்த பிக்கு, இதுத் தொடர்பில் கண்டி பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், கடை உடனடியாக மூடப்பட்டதோடு, கடையில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.