றொமேனியாவில் 7 இலங்கையருக்கு கொரோனா என்று 44 பேரையும் வேலையால் நிறுத்தியது நிர்வாகம்
08 May,2020
றொமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது . றொமேனிய நாடு ஏற்கனவே மிகவும் இனத் துவேசம் மிக்க ஒரு நாடாக இருந்து வருகிறது. அன் நாட்டில் உள்ள இளைஞர்கள் ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் அன் நாட்டுக்கு வேற்றின மக்கள் சென்றால், போதும். உடனே அவர்களை விரட்டி அடிக்க கிராம மக்களே ஒன்று பட்டு விடுவார்கள்.
இப்படி ஒரு நிலை அங்கே காணப்படுகிறது. இலங்கையை சேர்ந்தவர்கள் வேலைக்கு சமூகமளிக்காததன் காரணமாகவே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒரு இலங்கையருக்கு கொரோனா என்றது 44 பேரையும் இவர்கள் வேலையால் நிறுத்தியது சட்டத்திற்கு புறம்பான விடையம் என்று சில முற்போக்கு றொமேனிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.