இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரிப்பு
08 May,2020
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் படி இதுவரை 582 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
134 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை இலங்கையில் 232 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளனர்