தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!
07 May,2020
தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.