இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு அறிகுறிகள் தென்படவில்லை – ஆய்வில் தகவல் ! முழுமையான தகவல் இதோ !
06 May,2020
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 11 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 760 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கண்டறியப்பட்ட 11 பேரில் நால்வர் கொழும்பிலும் ஏனைய 7 பேரில் ஒருவர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலும் அடையாளம் காணப்பட்டதாகவும் மற்றைய 4 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தோர் எனவும் ஏனை இருவர் தொடர்பன விபரங்கள்வெளியாவல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார்.
அதன்படி அடையாளம் காணப்பட்ட 762 தொற்றாளர்களில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், இன்று மட்டும் 19 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் மேலும் 538 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 145 பேர் கொரனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 64 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 342 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 331 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள், சுகாதாரத்துறையினர் முன்னெடுத்துள்ள பகுப்பாய்வின் போது இது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவௌியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந் நிலையில், கொரோனா தொற்றாளர்களைக் கண்டறிய சுகாதாரத் துறை நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 986 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாயசிங்க கூறினார்.