வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 34 பேரும் கடற்படையினர்!
27 Apr,2020
இலங்கையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 34 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை மொத்தமாக வெலிசறை கடற்படை முகாமில் 112 பேருக்கும், விடுமுறையில் இருந்த 68 பேர் உட்பட மொத்தம் 180 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 126 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் 7 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.