மேலும் நால்வருக்கு கொரோனா 09 பேர் குணமடைந்தனர்.!
18 Apr,2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் 09 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.