ஸ்ரீலங்காவில் துறைமுகங்களையும் மூட வேண்டிய நிலை உருவாகியது
17 Apr,2020
தேசிய வியாபாரிகள் மூலமாக வரவழைக்கப்பட்ட கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற முடியாத நிலையில் துறைமுகத்தை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கொள்கலன்களை அகற்ற வியாபாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை துறைமுகத்தில் 30,000 கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களில் 26,000 கொள்கலன்கள் தேசிய வியாபாரிகளுடையது. இவற்றை வியாபாரிகள் பெற்றுக்கொள்ளாது போனால் துறைமுகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும்.