ஹோட்டல் ஒன்றில் தற்கொலை குண்டுதாரியுடன் கலந்துரையாடியுள்ள ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ்!
16 Apr,2020
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
அத்துடன் தாக்குதலை அண்மித்த நாள் ஒன்றில் பிரசித்த ஹோட்டல் ஒன்றில் குறித்த தற்கொலைதாரியை தனியே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரியாஜ் பதியுதீன்
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சிஐடியின் பிரதான விசாரணைக் குழு, பிரசித்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் ரியாஜ் பதியுதீன், சுங்க அதிகாரி ஒருவர் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளது.
இன்று (15) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளது.