ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!
15 Apr,2020
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாத் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இடம்பெற்ற நடவடிக்கையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.