கொழும்பு ருதானையில் தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த 2 பொலிஸார் பணி இடைநிறுத்தம்!
14 Apr,2020
ஊரடங்குச் சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும்வகையில் இன்று (12) முதல் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில், நகர போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.
மருதானை பொலிஸ் பிரிவின், டாலி வீதி பகுதியில் நேற்று ஊரடங்கு அமுலில் இருந்தபோது, ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி அந்த வீதியால் நடந்து சென்ற நால்வரை, இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்தனர்.
தனது கைகளால் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு குனிந்து எழும் வகையில் இவ்வாறு அந்த நால்வரும் தண்டிக்கப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகியமை தெரிந்ததே