இலங்கையில் ஐந்தாவது நபரை பலியெடுத்த கொரோனா
04 Apr,2020
கொரோனா வைரஸ் தொற்றினால் சற்று முன்னர் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இத்தாலியில் இருந்து வந்தவர் என வைத்திய இயக்குனர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
“26ஆம் திகதி குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குறித்த நபருக்கு வேறு எவ்விதமாக நோய்களும் காணப்படவில்லை. குறித்த நபர் ஆரம்பத்திலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது உடல் முக்கிய பகுதிகளில் வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது. இந்த மரணம் மிகவும் வருத்தமாளிக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.