டுபாயில் இருந்து இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை!
30 Mar,2020
களுத்துறை - பண்டாரகம், அட்டுலுகம என்ற கிராமம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் அவர்களது வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டுபாய் சென்று அட்டுலுகம கிராமத்திற்கு வந்த இரு நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் சுற்றித்திரிந்துள்ளனர்.
எனினும் குறித்த நபர்களில் ஒருவர் வரும் போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்தே குறித்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கிராமத்தில் முச்சக்கர வண்டி சாரதியான ஒருவருக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரி என ஒரே குடும்பத்தில் மூவர் குறித்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்தே குறித்த கிராமம் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.