கற்பிட்டி விமானப்படை தளத்திலேயே துப்பாக்கி பிரயோகம்
29 Mar,2020
முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள கற்பிட்டி விமானப்படை தளத்திலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.