ஒளிச்சு திரியும் இத்தாலி நாட்டவர்: புலிகளை தேடுவது போல curfew போட்டு தேடும் சிங்கள ராணுவம் !
18 Mar,2020
இலங்கைக்குள் இருக்கும் சில இத்தாலி நாட்டவர்கள் ஒளிச்சு திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இத்தாலி நாட்டவர்கள் அல்ல என்றும். இத்தாலியில் இருந்து வந்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இவர்களை வந்து சரணடையுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்தும். இவர்கள் ஒளிந்து ஓடிக்கொண்டு இருப்பது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதனால் புத்தளம் மாவட்டம் மற்றும் கொச்சிக்கடை பகுதி ஆகிய 2 இடங்களிலும் , பொலிசார் ஊரடங்கு சட்டம் அறிவித்துள்ளார்கள்.
இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.