இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
16 Mar,2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த 7 பேரும் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் தற்போது மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 18 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.